இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதத்தில் அதிகரித்துள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டி வீதியிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளுக்கமைய, தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 141,000 ரூபா ஆகும்.
மேலும், 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 130,500 ரூபா ஆகும்.