Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிலை அதிகரிப்புக்கு தயாராகும் CEYPETCO?

விலை அதிகரிப்புக்கு தயாராகும் CEYPETCO?

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளமைக்கு நிகராக, கனியவள கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பதா? அல்லது விலை அதிகரிப்பின்றி அவ்வாறே தொடர்வதா? என்பது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில், முதலாவதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபன தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், அது குறித்து நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் உயர்த்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles