ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவில் வைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட விலகியுள்ளார்.
நீதியரசர் யசந்த கோதாகொட உள்ளிட்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று (10) அழைக்கப்பட்டது.
அதன்போது, இந்த மனுவை பரிசீலிப்பதில் இருந்து தான் விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசகர் யசந்த கோதாகொட அறிவித்துள்ளார்.
இந்த மனு எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.