நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மரக்கறி செய்கை 40 சதவீதமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
டீசல் தட்டுப்பாட்டினால், வர்த்தகர்கள் வாகனங்கள் மூலம் விளைநிலங்களுக்குச் சென்று, அறுவடைகளை கொள்வனவு செய்வதையோ அல்லது அவற்றை சந்தைக்கு கொண்டு செல்வதையோ அவதானிக்கக் கூடியதாக இல்லையென அந்த சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, சிற்றுணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையால், வர்த்தகர்கள் சந்தைக்கு மரக்கறிகளை கொள்வனவு செய்யவதற்காக விளைநிலங்களுக்கு செல்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.