Friday, October 31, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை சுட்டு கொன்ற தந்தை

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை சுட்டு கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் தந்தையொருவர் தனது பச்சிளம் குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இந்நபருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, அண்மையில் 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த தனக்கு 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அந்நபர் கடும் கோபத்தில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிறந்து 7 நாட்களேயான தனது குழந்தையை சந்தேகநபரான தந்தை 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் குழந்தையின் புகைப்படத்துடன், இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles