கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 29 மற்றும் 30 வயதுடைய அம்பிட்டிய மற்றும் பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.
இவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கiள கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.