Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் துறை ஊழியர்களுக்கு விசேட சலுகை

தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட சலுகை

அரசாங்க ஊழியர்களைப் போலவே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீடு, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கும் வகையில் ஊழியர் கட்டளைச் சட்டத்தின் சரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 500,000 ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles