Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் விசேட சலுகை

ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் விசேட சலுகை

கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிகளின் ஊடாக ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு ஓய்வூதியதாரருக்கும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்களில், ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சலுகைகளை வழங்க முடியும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் மொத்த விலையில், 5 சதவீதம் தள்ளுபடியும், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்படும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகப் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கில்ஸ் குழுமத்துடன் இணைந்த திரையரங்குகளுக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு 25 சதவீத தள்ளுபடியும், KFC உணவகங்களில் 5,000 ரூபாவுக்கு அதிகமான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தால் 10 சதவீத தள்ளுபடியும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles