நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்குள் குறைவடையும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
20, 000 மெட்ரிக் டன் எரிபொருள் களஞ்சியசாலைகளில் கையிருப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.