அலவ்வ – பொல்கஹவலவுக்கு இடையேயான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வலகும்புற தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று (10) பிற்பகல் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளமையால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் இடம்பெறுவதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.