Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் காலமானார்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட முதல் மனிதர் காலமானார்

அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவினா் மேரிலாந்து வைத்தியசாலையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அவரது உடல்நிலை சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ வரலாற்றில் பன்றியின் இதயம் மனிதனுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயம், அவருக்கு பொறுத்தப்பட்டிருந்தது.

உலகின் முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான வைத்தியர் பார்ட்லி கிரிஃபித் வழிகாட்டுதலின் கீழ் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்நிலையில், அறுவை சிகிச்சை நிறைவடைந்து 2 மாதங்களுக்கு பின்னர், குறித்த நபர் நேற்று (07) உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles