Friday, September 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாகித பற்றாக்குறையால் பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல்

காகித பற்றாக்குறையால் பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல்

அச்சிடல் நடவடிக்கைகளுக்கு தேவையான காகிதம் இன்மை காரணமாக அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் காகிதங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

பின்னர் துறைமுகத்தில் சிக்கியிருந்த காகிதம் தாங்கிய 8 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட காகிதம் தற்போது நிறைவடைந்துள்ளதன் காரணமாக அச்சிடல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles