ஹாலி எல – உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் நேற்று 18 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலம் நிலவிய முன் பகை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார்
அதேவேளை, அவரை கைது செய்வதற்கு ஹாலி எல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.