களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், காய்ச்சல் மற்றும் சரும நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயில்களில் இருந்தே குறித்த நோய்த் தொற்று பரவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள் தற்போது ஈரப்பகுதிக்கு படிப்படியாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள விவசாய பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது இந்த காய்ச்சல் மற்றும் சரும நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.