டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுடன் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனவே பொருளாதார நெருக்கடி தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதில் அரசாங்கத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த தவிர்ந்த ஏனைய அனைத்து பின்வரிசை உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.