இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவராக, ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட நாலக்க பெரேரா, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய தலைவர் இன்று (09) காலை தமது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா, இலங்கை காணி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.