Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்600 கி.மீ தனியாக பயணித்து ஸ்லோவாகியாவை அடைந்த யுக்ரைன் சிறுவன்

600 கி.மீ தனியாக பயணித்து ஸ்லோவாகியாவை அடைந்த யுக்ரைன் சிறுவன்

ரஷ்யா – யுக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் யுக்ரைனில் இருந்து 11 வயது சிறுவன் தனியாக 600 கிலோமீட்டர் பயணித்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றுள்ளார்.

பெற்றோர்களின்றி தனியாக பயணித்து குறித்த சிறுவன் ஸ்லோவாகியாவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைந்துள்ள ஷப்ரிஹியா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.

அந்த பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுனே இவ்வாறு அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றடைந்துள்ளான்.

ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் குறித்த சிறுவனின் தாய் யூலியா, தனது உறவினர்களை விட்டு வர முடியாத காரணத்தினால், தனது மகனை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்.

தனது மகனின் கையில் அவர் கைப்பேசி எண்ணை எழுதியுள்ளதுடன், எல்லையை கடப்பதற்கான கடவுச்சீட்டையும் மகனிடம் கொடுத்து தொடருந்தில் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுவன் தொடருந்தில் பயணித்தும், நடந்து மற்றும் பல்வேறு நபர்களின் உதவியுடனும் சுமார் 600 கிலோமீட்டர் தூரம் தனியாக பயணித்து நேற்று ஸ்லொவாகியா நாட்டிற்குள் சென்றுள்ளார்.

ஸ்லொவாகியாவுக்குள் நுழைந்த அந்த சிறுவனை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். மேலும், தனது மகனை வரவேற்ற ஸ்லொவாகியா அதிகாரிகளுக்கு சிறுவனின் தாய் யூலியா நன்றி தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles