Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோ கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.

யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 13 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது.

சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய படைகள் அறிவித்திருந்தன. எனினும் அது அவ்வாறு செயல்படுத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இராணுவ தளங்களை மட்டும் தாக்குவதாக தெரிவித்து ரஷ்ய படைகள், யுக்ரைனில் உள்ள குடியிருப்புகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கும் தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுக்ரைனின் ஹாஸ்டோமல் நகர மேயர் யூரி புரைலிப்கோ, மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து உதவுவதற்காக வெளியே வந்தபோது ரஷ்ய துருப்பினர் நடததிய துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

இந்நிலையில், கார்கிவ் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவை யுக்ரைன் படைகள் கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஜெனரல் ஜெராசிமோவ் ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் என்பதுடன், அவர் இரண்டாவது செச்சென் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles