தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பெரியவர்களுக்கான கட்டணம் 110 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ரிதியகம மிருகக்காட்சி சாலைக்கான நுழைவு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெரியவர்களுக்கான கட்டணம் 350 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 120 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.