ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு – நகரமண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகன சாரதிகள், கொழும்பிலிருந்து வெளியேறும் வாகன சாரதிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.