திருகோணமலை – கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய இருவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.