Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்வணிகம்இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மையை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு 230 ரூபாவினை விஞ்சாத மட்டங்களில் இடம்பெறுமென இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.

இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன் அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளும் எனவும் மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த பெப்ரவரியில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது கடந்த ஜனவரியில் நிலவிய தொகையை விட 2 சதவீதம் குறைவாகும்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles