Friday, March 21, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCEYPETCO கட்டடத்தில் 50 மில்லியன் ரூபா செலவில் சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

CEYPETCO கட்டடத்தில் 50 மில்லியன் ரூபா செலவில் சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனக் கட்டடத்தில் (CEYPETCO), மேலும் 50 மில்லியன் ரூபா செலவில் புதிய சிசிரிவி கெமராக்களை பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடத்தில், ஏற்கனவே சிசிரிவி கெமராக்கள் செயல்படும் நிலையில், இந்த புதிய கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

18,848 மில்லியன் ரூபா நட்டத்தை கொண்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் நிலையில், குறித்த சிசிரிவி கெமராக்களை பொருத்துவதற்கு 50 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடம் முழுவதும் சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், உயர் அதிகாரிகளின் அறைகளுக்கு உயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles