15 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.
65 நாட்கள் இடம்பெறவுள்ள இந்த தொடரில் 70 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஓஃப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதலாவது லீக் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.