கிவ் உள்ளிட்ட பகுதிகளில் போர்க்குற்றங்களை இழைக்கும் எந்தவொரு ரஷ்ய இராணுவ சிப்பாயையும் மன்னிக்க போவதில்லை என யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு விசேட உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா போர்க்குற்றங்களை இழைத்து வருவதால், அதிகளவான பொதுமக்கள் இறக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தமது நாட்டின் கல்லறையின் ஊடாகவே அமைதியை ஏற்படுத்துவோம் என யுக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 48 மணித்தியாலங்களில் யுக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ரஷ்ய துருப்பினர் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக பிரித்தானிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.