பாணந்துறை, ஹொரனை, களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை உள்ளிட்ட இடங்கள் பலவற்றில் நேற்றிரவு திடீர் மின் தடை ஏற்பட்டது.
தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில் இன்றைய தினமும் வலுசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினமும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், புதிய வலுசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில், அமைச்சின் அதிகாரிகளால் தெளிவூட்டப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்றைய தினம் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் ஏனைய காரணிகள் தொடர்பில் அதிகளவில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.