Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'நெந்துன்கமுவே ராஜா´ தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

‘நெந்துன்கமுவே ராஜா´ தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், உயிரிழந்த ‘நெந்துன்கமுவே ராஜா´ யானை, தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த ´நெந்துன்கமுவே ராஜா´ யானை ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.

குறித்த யானை இன்று அதிகாலை 5.30 அளவில் மரணித்ததாக அதன் பராமரிப்பாளர் வைத்தியர் ஹர்ச தர்மவிஜய தெரிவித்துள்ளார்.

1953ஆம் ஆண்டு இந்தியாவின் – மனிப்பூரில் பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதாகும்.

இந்நிலையில், யானையை தேசிய பொக்கிஷமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், யானையின் சடலத்தை எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக பாதுகாக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles