நாட்டின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவல ஏற்றுமதி வலையத்தில் இன்று திறக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிநவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தை கொண்ட குறித்த சீமெந்து தொழிற்சாலையில், வருடாந்தம் 2 மில்லியன் மெட்ரிக் டன் சீமெந்தை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட 06 உள்ளூர் சீமெந்து தொழிற்சாலைகளின் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை இதுவாகும்.
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாட்டப்பட்டது.
புதிய சீமெந்து தொழிற்சாலையின் மூலம் வருடத்திற்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் சீமெந்தை சந்தைக்கு வெளியிட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.