கொவிட் தொற்றால உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிலுள்ள எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியில் பத்திரிகை நிகழ்ச்சியும் இது குறித்து கவனத்தை செலுத்தியிருந்தது.
நீதிமன்ற வைத்திய நிபுணர்கள் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.