மெக்சிகோவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 17 பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதலில் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவில் நடைபெற்ற பெரிய க்ளப் லீக் கால்பந்தாட்ட போட்டியின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
Queretaro மற்றும் Atlas அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
போட்டியின் 63 ஆவது நிமிடத்தில் இந்த மோதல் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அமைதியின்மை காரணமாக போட்டியை இடைநிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதேவேளை, இந்த போட்டியின் எதிர்வரும் போட்டிகளையும் இடைநிறுத்துவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.