மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் நேற்று (06) சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னார் -எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.