இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, 19.38 மில்லியன் கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அதிகளவில் ரஷ்யா மற்றும் ஈராக்கினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், சீனாவிற்கு கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை தொகையினை காட்டிலும் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 இலட்சத்து 38 ஆயிரம் கிலோகிராம் ஏற்றுமதி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தேயிலை உற்பத்தியானது கடந்த ஜனவரி மாதத்தில் 22.82 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 3 ரூபா 50 சதம் அமெரிக்க டொலராக கடந்த ஜனவரி மாதத்தில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.