இன்றைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக இந்த மின்வெட்டு அமுலாக்கப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.
இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.