Monday, May 5, 2025
32 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனின் சில நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தியது ரஷ்யா

யுக்ரைனின் சில நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தியது ரஷ்யா

யுக்ரைனின் மேலும் சில நகரங்களில் ரஷ்யா தற்காலிகமாக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது.

யுக்ரைன் – ரஷ்யா போர் இன்று 12 ஆவது நாளாக தொடரும் நிலையில், யுக்ரைனில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, யுக்ரைனின் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளது.

மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பாதுாகப்பாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 11 நாட்களில் சுமார் 15 இலட்சம் பேர் யுக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தநிலையில், யுக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles