Sunday, July 6, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை சுத்தியலால் தாக்கிய 17 வயது மகள்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை சுத்தியலால் தாக்கிய 17 வயது மகள்!

பேருவளை பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் தலையை மகளொருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் குறித்த யுவதி தனது தாயை சுத்தியலால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேருவளை, கலவில கந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான யுவதியே தனது தாயை இவ்வாறு தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான மகளை தமது பொறுப்பில் எடுத்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles