Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

யுக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

யுக்ரைனின் சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று (04) அதிகாலை ரஷ்ய படைகள் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளன.

அத்துடன், குறித்த மின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்படும் நிலையில், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைனுக்கு 25 சதவீத மின் விநியோகத்தை வழங்கும் சபோரோஷியா அணுமின் நிலையம், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக கருதப்படுகிறது.

மேலும், குறித்த அணுமின் நிலையத்தின் அருகே கதிர்வீச்சு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles