யுகதனவி மின்நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் 5 மனுக்களையும், விசாரணையின்றி நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று இடம்பெற்றபோது, உயர்நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
எல்லே குணவங்ச தேரர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்ஹ ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளில் 40 சதவீதமானவற்றை, அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் உசிதமற்றதென மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த மனுக்களுக்கு ஆதரவளிக்கும் சத்திய கடதாசிகளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் நேற்று பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில ஆகியோர் உயர்நீதிமன்றில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.