போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் திலும் அமுனுகம, போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க அமைச்சுகளில் நேற்று மாற்றம் செய்யப்பட்ட வேளை, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தமது அமைச்சுபதவிகளில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.