ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஜனாதிபதி, பொறுப்பான அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.