இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
இதன்படி, நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம், 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
துணை நில் கடன் வசதி வீதம், 7.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம், 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதம், 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.