புதிய வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகேவும், புதிய மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் மேற்கொண்டார்.
முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டார்.
தான் பதவீ நீக்கப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அவர் தமது பேஸ்புக் கணக்கில் நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும் வலுசக்தி அமைச்சராக பதவி வகித்த உதய கம்மன்பிலவும் அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.