உலக சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதற்கமைய, இன்றைய தினத்தில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 டொலராக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 110 டொலராக அதிகரித்திருந்த நிலையில், இன்று அதன் விலை 6 டொலரால் அதிகரித்து 116 டொலராக உயர்வடைந்துள்ளது.