கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்றுக் கொண்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருடன் இணைந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராண்ட்பாஸ் – கஜிமா வத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.