இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தையும் பாராட்டியுள்ளது.
அதற்கமைய, இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் முடித்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் கடனைக் குறைக்கவும் நம்பகமான மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கான அவசரத்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான கொவிட்-19 பரவல், முடக்க நிலை காரணமாக 2020 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவீதத்தினால் சுருங்கியது.