அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு அவர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்வாறு புகைப்படங்களை அனுப்பாவிடத்து, குறித்த சிறுமிகளை போலியாக சித்தரித்த புகைப்படங்களை அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அனுப்பி வைப்பதாக சந்தேக நபர் மிரட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர், 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், சந்தேக நபர் 10 வயது சிறுமிகளையும் அச்சுறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன்,
சந்தேகநபருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதித்து விக்டோரியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர் சிறைவாசம் நிறைவுற்ற பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.