Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உலகம்6 நாட்களில் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

6 நாட்களில் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்ற போரில் சுமார் 6,000 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று தெரிவித்தார்.

இதேவேளை, யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் 7 ஆவது நாளாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. யுக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ தளங்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் யுக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இன்று காலை ரஷ்யாவின் வான்வழிப் படைகள் யுக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்து பயங்கர தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில் தெற்கு யுக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் நகரம் யுக்ரைன் நாட்டின் முக்கிய வர்த்தக நகரமாகும்.

சுமார் 3 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட கெர்சன் நகரில் 20 சதவீத ரஷ்ய நாட்டினர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles