பெருமளவிலான அதி சொகுசு ரக வாகனங்களுடன் பயணித்த கப்பலொன்று தீக்கிரையாகி கடலில் மூழ்கியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் போர்த்துகலுக்கு அருகில் அமைந்துள்ள அசோரெஸ் தீவுகளுக்கு அருகில் தீக்கிரையானதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘ஃபெலிசிட் ஏஸ்’ என்றழைக்கப்படும் குறித்த கப்பலில் 4,000 லம்போகினி, போர்ஷெ மற்றும் பென்ட்லி ரக சொகுசு வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் ஜேர்மனி எம்டன் துறைமுகத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த கப்பலில் பயணித்த பணிக்குழாமினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கப்பல் அத்திலாந்திக் சமுத்திரத்தில் 3,500 மீற்றர் ஆழத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தமது வாகனங்களுக்கா 155 மில்லியன் டொலர் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மேற்படி கப்பலில் 189 பென்ட்லி வாகனங்களும், 1,100 போர்ஷெ வாகனங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.