வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டியொன்று இன்று (02) காலை 5.30 அளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த சம்பவம் காலி – தல்கம்பல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இந்த சம்பவத்தினால் குறித்த முச்சக்கர வண்டியின் பின்பகுதி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.