Sunday, October 19, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்ய பீரங்கியை திருடும் யுக்ரைன் விவசாயி! (காணொளி)

ரஷ்ய பீரங்கியை திருடும் யுக்ரைன் விவசாயி! (காணொளி)

யுக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான யுத்தம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

யுக்ரைனின் தலைநகரான கீவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் உள்ள உள்ளூர் அரசு தலைமையகத்தை ரஷ்யப் படைகள் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் பீரங்கியை யுக்ரைன் விவசாயி ஒருவர் தனது ட்ராக்டரில் இணைத்துத் திருடிச்செல்லும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில், ரஷ்ய எம்.டி.எல்.வி எனப்படும் பீரங்கியை குறித்த விவசாயி தனது ட்ராக்டருடன் இணைத்துத் திருடிச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இந்த காணொளியை அவுஸ்திரேலியாவுக்கான யுக்ரைன் தூதுவர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் “யுக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் கடினமானவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles