Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கண்டனம்

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கண்டனம்

யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் யுக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

எனினும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷ்யாவை எதிர்த்து இதுவரை போரிடவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (01) உரையாற்றினார்.

இதன்போது, யுக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புட்டின் நினைத்துவிட்டார்.

மேலும், யுக்ரைன் போருக்கு மேற்குலக நாடுகளின் பதிலளிப்பை புட்டின் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

புட்டின் எம்மை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளார். நாங்கள் தயார் என அவர் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles